
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இன்று காலை முதல் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியும் பேத்தியும் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.