
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலை முதல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் நீலகிரியில் உள்ள 6 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. மேலும் தேனி , தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.