
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகரவிளக்கு பூஜை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்று ஐயப்பனை வழிபடுவார்கள். இந்த நிலையில் மகர விளக்கு சீசனை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. எருமேலி, பம்பை, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.