தஞ்சாவூரில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துசாமி, மீனா, ராணி, லட்சுமி, மோகனாம்பாள் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு சங்கீதா மற்றும் கவியரசன் ஆகியோர் பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ‌.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.