தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான தவணை பயனர்களின் வங்கி கணக்கில் சற்று முன் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள்.  மேல் முறையீடு செய்தவர்களில் விடுபட்டவர்கள் ஒரு சிலருக்கு இந்த மாதம் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என உடனே செக் பண்ணுங்க.