இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடப்பு ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் மும்பை அணியுடன் மோதிய சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில் அதற்கு அடுத்து நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்விதான். குறிப்பாக சொந்த மண்ணில் கூட சிஎஸ்கேவால் வெற்றி பெற முடியாமல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதன் காரணமாக சிஎஸ்கே நிர்வாகம் மீண்டும் எம் எஸ் தோனியை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் சிஎஸ்கே இனியாவது வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வெளியிட்டுள்ளார்.