
தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகளை காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகங்கள் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலை இன்றி பணியாற்றும் சூழலை உருவாக்க உதவும்.
பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.