நீட் முறைகேடு சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக NTA கூறியுள்ளது.