
சென்னை உயர்நீதி மன்றத்தில் 16 வயது சிறுமியின் கருவை கலைக்க வேண்டும் என தாய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த சிறுமி கர்ப்பமாகி 24 வாரங்கள் ஆகிறது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருவை கலைக்க அனுமதி கொடுத்தனர். அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பெண்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறிய நீதிபதிகள் சிறுமிகளாக இருந்தாலும் கருவை கலைக்க அவர்களின் விருப்பம் முக்கியம் என்று கூறியுள்ளனர்.
சிறுமிகளாக இருந்தாலும் அவர்கள் விருப்பப்பட்டால் மட்டும்தான் கருவை கலைக்க முடியும் எனவும் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாகும் போது அந்த கருவை கலைக்க கார்டியனின் ஒப்புதல் அவசியமாக இருக்கும் நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.