வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1809 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 1840.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களில் சிலிண்டர் விலை 151 ரூபாய் குறைந்துள்ளது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வரும் நிலையில் இன்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.