நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் வாங்கிய கடன்களுக்காக அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அந்த வீடு நடிகர் பிரபுவுக்கு மட்டுமே சொந்தம் என்பது உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்ததுடன் அந்த வீடு முழுமையாக நடிகர் பிரபுவுக்கு மட்டுமே சொந்தம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த இல்லத்தில் அண்ணன் மற்றும் அண்ணன் மகனுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.