
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்த அந்த கட்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் இன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் ஜால்ரா போடும் நபர்களுக்கும் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நபர்களுக்கு மட்டும் தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும் ரகு கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் பலர் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.