அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் திமுக கட்சிக்கு மாறிய செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.அ

தன்பிறகு மீண்டும் அவர் அமைச்சராக ‌ சுப்ரீம் கோர்ட் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவார் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழக அமைச்சரவையில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன், நாசர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அமைச்சர்கள் அனைவரும் நாளை மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க இருக்கிறார்கள்.