முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக செந்தில் பாலாஜியின் ‌ ஜாமீன் மனோ தள்ளுபடி செய்யப்பட்டு வருவதோடு ‌ நீதிமன்ற காவலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடங்கியதால் தற்போது அமலாக்க துறைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது‌. மேலும் இதனை ஏற்ற நீதிமன்றம் அவருடைய மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.