
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து ஐசியுவில் உள்ளார். வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு இயற்கை முறையில் செந்தில் பாலாஜி சுவாசிக்கிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.