நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பலரும் பட்டாசுகளை வெடிப்பார்கள். இதன் காரணமாக தற்போது காற்று மாசுபாடை அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. அதாவது காற்று மாசுபாடு அளவு டெல்லியில் 331 என்று அபாய கட்டத்தை தாண்டிவிட்ட நிலையில் ஆனந்த் விகார் பகுதியில் 441 ஆகவும், ஜகாங்கிரி பூரில் 401 ஆகவும் இருக்கிறது.

ஏற்கனவே நேற்றே டெல்லியில் 8 இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்த நிலையில் தற்போது காற்று மாசுபாடு அபாய கட்டத்தையும் தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலும் காற்று மாசுபாடு உயர்ந்துள்ளது. மேலும் அதன்படி காற்று  தரக் குறியீடு சென்னையில் 4 இடங்களில் 200 தாண்டியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.