
2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன.விண்ணப்பங்களை பரிசீலித்து இம்மாத இறுதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என்று FIDE தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.