
சென்னையில் தற்போது சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வந்த கடிதத்தில் பாமகவுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.