
சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதேபோன்று முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.