சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் ஜாகடே சென்னை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.