சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா. மிக பிரம்மாண்ட பொருட்ச அளவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.