
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது 18 ராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்ற நிலையில் அந்த வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தகவலை ராணுவ அலுவலகம் பகிர்ந்துள்ள நிலையில் உயிரிழுந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.