ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும், அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்ரீ நகருக்கு சென்று முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த அளவில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவின் அழகையும் அதன் மக்களையும் கண்டு வியந்துள்ளோம். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என கூறியுள்ளார்.