
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்திலேயே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் முன்னிலை வகிக்கிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோன்று சரியான மாநிலத்தில் காங்கிரஸ் 18 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் மற்ற கட்சிகள் இரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தற்போது வரை காங்கிரஸ் 46 இடங்களிலும், பாஜக 18 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் 31 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.