
சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. அதேபோல், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், இச்சோதனை நடக்கிறது.