
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் இருக்கிறார்.
இவர் பர்கைத் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கம்லியஸ் ஹெம்ப்ரோம் 55821 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும் மெஜாரிட்டிக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் இந்தியா கூட்டணி 52 இடங்களில் வென்றுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.