
சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் போது எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை நடிகர் விஜய் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளிவந்தது. திருமாவளவன் அந்த புத்தகத்தை வெளியிட நடிகர் விஜய் பெற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழக வெற்றி கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் பின்னர் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிலையில் அவர் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட அதனை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று டாக்டர் அம்பேத்கரின் பேரனும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டேவும் நடிகர் விஜய் வெளியிடும் புத்தகத்தை பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்வாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.