டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கெஜ்ரிவால் வழங்க உள்ளார். இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு இழந்த நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதன் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த அமைச்சர் அதிஷி புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது இவர்தான் அரசை திறமையான முறையில் நிர்வகித்தார். மேலும் இதனால் தற்போது அதிஷியை புதிய முதல்வராக தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.