டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் பாஜகவில் பல பிரிவுகளில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றால் டெல்லியில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது.

இந்த நிலையில் மார்ச் 8-ம் தேதி முதல் டெல்லியில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தற்போது முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். மேலும் முன்னதாக பாஜக ஆட்சிக்கு வந்தால் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என்று வாக்கு கொடுத்த நிலையில் தற்போது அந்த பணிகளையும் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.