காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன். இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாவார். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாகவே சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குமரி ஆனந்தன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர். இவருடைய சகோதரர் மறைந்த வசந்தகுமார். இவருடைய மகள் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இந்நிலையில் குமரி ஆனந்தன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் காங்கிரஸ் இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட குமரி ஆனந்தன் மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு. நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை அவரையே சேரும்.

தமிழ் தன் மூச்சு என வாழ்ந்த குமரி ஆனந்தன் மறைவை கேட்டு நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்‌. அவருடைய மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார். அதோடு குமரி ஆனந்தன் உடலுக்கு அரசு மரியாதையோடு செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ் சமுதாயத்திற்கு ஆட்சிய பங்களிப்பிற்காக அவருடைய திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.