சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை 200 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8945 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9758 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.