தங்க நகை கடன் புதிய விதிமுறை தொடர்பாக பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை வட்டியோடு அசல் தொகை செலுத்தி நகைகளை பெற்று மறுநாள் புதிதாக அடகு வைக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்க நகை கடன் புதிய விதிமுறை தொடர்பாக மத்திய நிதித்துறை செயலர் ரிசர்வ் வங்கி மேலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.