தஞ்சாவூர் முன்னாள் எம்.பி பரசுராமன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 63 வயதான பரசுராமன் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அதிமுகவில் இருந்து எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரசுராமன். அண்மையில் திமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வந்துள்ளார் தஞ்சை முன்னாள் எம்பி பரசுராமன்.