தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.