கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது திருச்சி நோக்கி ஒரு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மற்றும் மினி லாரி மீது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.