
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தற்போது அதிக கன மழைக்காண ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.