தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திருத்தணி முருகன் கோவிலும் ஒன்றாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள்.

இந்த கோவிலில் வருகின்ற 29ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா விமர்சையாக நடைபெறும். இதன் காரணமாக ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.