
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பூலித்தேவனின் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.