தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தியாவில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 4, 8, 9, 10 ஆகிய 4 ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.