
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்
உள் மாவட்டங்களில் வெப்பம் படிப்படியாக குறையும். அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் . சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.