தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

அந்த வகையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 46,760 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் செஸ் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பள்ளி கல்வித்துறையில் செஸ் போட்டியை சேர்க்கும் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

அதன் பிறகு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1721 முதுநிலை ஆசிரியர்கள் மற்றும்841 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இந்த வருடம் நிரப்பப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்