
சென்னை ஈசிஆரில் கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம் மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துவ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.