
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே அத்தி மரப்பாலம் பகுதியில் இன்று நடந்த பயங்கர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது மகாராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கேரளா நோக்கி சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.