
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தின் மீது கார் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த காரில் மொத்தம் 7 பேர் பயணித்த நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் மற்றும் பெண் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பச்சிளம் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது இப்படி ஒரு சோகம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.