
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிரபல ரவுடி சிசீங் ராஜா போலீஸ்சாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில் 25 பேர் மீது இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சிசீங் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்த தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த நிலையில்இன்று அவரை விசாரிக்க அழைத்துவரப்பட்ட போது போலீசாரயை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொலை செய்யப்பட்டார். மேலும் தமிழகத்தில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.