
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது மினி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீதர், நிதீஷ் குமார், வாசு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.