
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து யார் அந்த சார் என்று கோஷம் எழுப்பியதால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பாமகவினரும் இந்த விவகாரத்திற்காக வெளியேறினர். இதைத்தொடர்ந்து தற்போது பாஜக எம்எல்ஏக்களும் அவையை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் ஆளுநர் ரவி தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சபை தொடங்கிய வேகத்தில் வெளியேறிய நிலையில் அவருடைய உரையை சபாநாயகர் அப்பாவு படித்து வருகிறார்.
அவர் தற்போது ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சபையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது நிலையில் இந்த கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமலையே இந்தியாவில் பல மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.