தமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் விசேஷ நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 3 நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், வல் வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலும், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.