
தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக 10 சுங்கச்சாவடிகளை திறக்க திட்டமிட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது