
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று இந்தியாவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் இருப்பதாக தற்போது மருத்துவத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று தான் எனவும் புதிதாக உருவானது கிடையாது எனவும் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த இரு குழந்தைகளும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று உள்ளவர்கள் தும்மல் மற்றும் இருமலின் போது வாயை மூடிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.